Home / Life Style / பட்டாணி கேரட் கோஸ் பொரியல் செய்வது எப்படி

பட்டாணி கேரட் கோஸ் பொரியல் செய்வது எப்படி

Tubetamil.org Announcement

பட்டாணி கேரட் கோஸ் பொரியல் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

கோஸ் – 200 கிராம்,
பச்சைப் பட்டாணி – 100 கிராம்,
கேரட் – 1,
தேங்காய்த் துருவல் – ஒரு கப்,
எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – பாதி,
உப்பு – தேவையான அளவு,


செய்முறை:

பட்டாணியைத் தோல் உரித்து, கோஸ், கேரட்டைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பைத் தாளித்து, மிளகாயை நறுக்கிப் போடவும். இதில், நறுக்கிய கோஸ், கேரட், பட்டாணி, உப்பு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடிவிடவும். நன்றாக வெந்ததும், தேங்காய்த் துருவல் சேர்த்து, கிளறி இறக்கவும்.

குறிப்பு: கோஸில், பருப்பு உசிலி, வடை, கூட்டு, பொரித்த குழம்பு தயாரிக்கலாம். இதய நோயாளிகள், உணவில் கோஸை சேர்ப்பது நல்லது.
பலன்கள்: பட்டாணியில் புரதம், கோஸில் தாது உப்புக்கள், பீட்டா கரோட்டின், கேரட்டில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் இருக்கின்றன. கண்களுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகள், எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் எடுத்துக்கொள்ளலாம்.