Home / Life Style / எளிய முறையில் முடக்கத்தான் கீரைத் துவையல் தயாரிக்கும் முறை

எளிய முறையில் முடக்கத்தான் கீரைத் துவையல் தயாரிக்கும் முறை

Tubetamil.org Announcement

எளிய முறையில் முடக்கத்தான் கீரைத் துவையல் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

சுத்தம் செய்து, ஆய்ந்த முடக்கத்தான் கீரை – ஒரு கப்,
காய்ந்த மிளகாய் – 5,
இஞ்சி – ஒரு துண்டு,
பூண்டு – 6 பல்,
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு,
எண்ணெய் – 6 டீஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
உப்பு – ருசிக்கேற்ப.


செய்முறை:

கடாயில் எண்ணெய்விட்டு முடக்கத்தான் கீரை, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன், புளி, உப்பு சேர்த்து, மிக்ஸியில் நன்கு அரைக்கவும். மீண்டும் சிறிது எண்ணெய்விட்டு, கடுகு தாளித்து, அரைத்த தொக்கைப் போட்டு, நன்கு வதக்க வேண்டும். ஆறியதும் எடுத்துவைத்தால், ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

பலன்கள்:

மூட்டுவலிக்குச் சிறந்த நிவாரணி. வயிற்று உப்புசம் தீரும். எலும்புகளுக்கும் தசைகளுக்கும் வலு ஊட்டும். ரத்தசோகையை நீக்கி, புத்துணர்ச்சி தரும்.