Home / Life Style / எளிய முறையில் பீர்க்கங்காய்த் துவையல் தயாரிக்கும் முறை

எளிய முறையில் பீர்க்கங்காய்த் துவையல் தயாரிக்கும் முறை

Tubetamil.org Announcement

எளிய முறையில் பீர்க்கங்காய்த் துவையல் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

தோல், விதை நீக்கி நறுக்கிய பீர்க்கங்காய் – கால் கிலோ,
இஞ்சி – ஒரு துண்டு,
காய்ந்த மிளகாய் – 6,
உளுத்தம் பருப்பு, நல்லெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்,
உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு,
எலுமிச்சைச் சாறு – சிறிதளவு.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,
பெருங்காயம், நல்லெண்ணெய் – சிறிதளவு.


செய்முறை:

கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, நறுக்கிய பீர்க்கங்காயைப் போட்டு வதக்க வேண்டும். நீர் வற்றும் வரை காயை வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு விட்டுக் கலக்க வேண்டும். இதனுடன், கடுகு, பெருங்காயம் தாளித்துச் சேர்க்க வேண்டும்.

இந்தத் துவையல் சிறிது இனிப்புச் சுவையுடன் இருக்கும். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட, சுவையாக இருக்கும்.

பலன்கள்:

பீர்க்கங்காயில் வைட்டமின் சி, ரிபோஃப்ளோவின் அதிகம். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். பார்வைத்திறன் மேம்படும். உடலுக்குக் குளிர்ச்சி தரும்.