Home / Life Style / எளிய முறையில் பீட்ரூட் கேரட் துவையல் தயாரிக்கும் முறை

எளிய முறையில் பீட்ரூட் கேரட் துவையல் தயாரிக்கும் முறை

Tubetamil.org Announcement

எளிய முறையில் பீட்ரூட் கேரட் துவையல் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

தோல் சீவித் துருவிய பீட்ரூட், கேரட் துருவல் – ஒரு கப்,
பச்சைமிளகாய் – 4,
புளி – சிறிய கோலி அளவு,
பூண்டுப்பல் – 3,
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:

நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்,
கடுகு, உடைத்த உளுந்து – தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு.


செய்முறை:

சிறிது நல்லெண்ணெயில் பூண்டை வதக்கி, துருவிய கேரட், பீட்ரூட், பச்சைமிளகாய், உப்பு, புளி சேர்த்து அரைக்க வேண்டும். இதனுடன், கடுகு, உளுந்து சேர்த்துத் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்க்க வேண்டும். தொக்கு பதத்துக்கு வரும் வரை இந்த விழுதைக் கிளறி இறக்க வேண்டும்.

பலன்கள்:

இரும்பு, பொட்டாசியம், மக்னீஷியம் வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பீட்டாகரோட்டின் இருப்பதால், கண்களுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பிரச்னை தீரும். சக்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.