Home / Life Style / எளிய முறையில் பச்சைமிளகாய்த் துவையல் தயாரிக்கும் முறை

எளிய முறையில் பச்சைமிளகாய்த் துவையல் தயாரிக்கும் முறை

Tubetamil.org Announcement

எளிய முறையில் பச்சைமிளகாய்த் துவையல் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

ஊசிப் பச்சைமிளகாய் – 15 (கீறிக்கொள்ளவும்),
புளி – எலுமிச்சை அளவு,
கடுகு – அரை டீஸ்பூன்,
கட்டிப் பெருங்காயம் – சிறிது,
வெல்லம் – 50 கிராம்,
உப்பு, மஞ்சள் தூள், நல்லெண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை:

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம் சேர்த்துப் பொரிக்கவும். பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, உப்பு, புளி, மஞ்சள் தூள் சேர்த்து அரைக்க வேண்டும். மூன்று டீஸ்பூன் நல்லெண்ணெயைச் சூடாக்கி, கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளிக்கவும். இதில், அரைத்த பச்சை மிளகாய் விழுது, வெல்லம் சேர்த்து, சுருளக் கிளறி இறக்கவும். வெல்லமும் எண்ணெயும் பச்சைமிளகாயின் காரத்தை மட்டுப்படுத்தி, சுவையையும் மணத்தையும் கூட்டும்.

பலன்கள்:

பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. வாய் கசப்பு நீங்கும். நார்ச்சத்து நிறைந்திருப்பதால், செரிமானத்துக்கு நல்லது.