Home / Life Style / எளிய முறையில் சௌசௌ துவையல் தயாரிக்கும் முறை

எளிய முறையில் சௌசௌ துவையல் தயாரிக்கும் முறை

Tubetamil.org Announcement

எளிய முறையில் சௌசௌ துவையல் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

தோல் நீக்கிய இளசான செளசெள – 1,
காய்ந்த மிளகாய் – 8,
புளி – சிறு நெல்லிக்காய் அளவு,
உப்பு – தேவையான அளவு,
தேங்காய்த் துருவல் – அரை மூடி.

தாளிக்க:

கடுகு, பெருங்காயத் தூள் – தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
உடைத்த உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.


செய்முறை:

கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய சௌசௌ, காய்ந்த மிளகாய், புளி, மற்றும் தேங்காய்த் துருவலை சேர்த்து வதக்கி, ஆறவிட வேண்டும். இதை, மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தைத் தாளித்துக் கொட்டவும்.

பலன்கள்:

கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து அதிகம் இருக்கின்றன. ஓரளவு புரதமும் கொழுப்பும் இருக்கின்றன. உடலுக்கு நல்ல வலுவைக் கூட்டும். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், சிறுநீரகப் பிரச்னையைக் குறைக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.