Home / Life Style / எளிய முறையில் சிவப்பு அரிசி இடியாப்பம் தயாரிக்கும் முறை

எளிய முறையில் சிவப்பு அரிசி இடியாப்பம் தயாரிக்கும் முறை

Tubetamil.org Announcement

எளிய முறையில் சிவப்பு அரிசி இடியாப்பம் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

நன்றாகப் பொடித்த சிவப்பு அரிசி மாவு அரை கிலோ,
கொதிக்க வைத்த தண்ணீர்,
தேங்காய்த்துருவல் சிறிதளவு,
உப்பு தேவையான அளவு,
தேங்காய் ஒன்று


செய்முறை:

சிவப்பு அரிசி மாவில் உப்பு மற்றும் கொதிக்கவைத்த தண்ணீர் சேர்த்து, கெட்டியான பேஸ்ட் பதத்திற்கு மாவை மாற்றவும். இந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு, இடியாப்பமாகப் பிழியவும். பிறகு குக்கரிலோ, இட்லி பாத்திரத்திலோ வைத்து வேகவிடவும். சூடான இடியாப்பத்துடன் தேங்காய்ப்பால், பால் சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்: வயதானவர்கள், குழந்தைகள், அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு இது. எனவே காலை அல்லது இரவு வேளையில் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து நிறைந்த உணவு. அனைவருமே சாப்பிடலாம்.