Home / Life Style / எளிய முறையில் சின்ன வெங்காயத் துவையல் தயாரிக்கும் முறை

எளிய முறையில் சின்ன வெங்காயத் துவையல் தயாரிக்கும் முறை

Tubetamil.org Announcement

எளிய முறையில் சின்ன வெங்காயத் துவையல் தயாரிக்கும் முறை


தேவையான பொருள்கள்-:

சின்ன வெங்காயம் – 100 கிராம்,
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
பூண்டு – 4,
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு,
காய்ந்த மிளகாய் – 6,
உப்பு – தேவையான அளவு,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
வெல்லம் – சிறிதளவு.


செய்முறை:

கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகாயைப் போட்டு, சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னொரு டீஸ்பூன் எண்ணெயில், பூண்டு, புளி, வெங்காயம் சேர்த்து, பச்சை வாசனை போக, வதக்க வேண்டும். இவற்றை மிக்ஸியில் போட்டு, உப்பு, வெல்லம் சேர்த்து அரைக்க வேண்டும். விருப்பப்பட்டால், ஒரு டீஸ்பூன் கடுகு தாளித்துச் சேர்க்கலாம்.

பலன்கள்: சின்ன வெங்காயத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, புரதம் இருப்பதால், ரத்தசோகை வருவது தடுக்கப்ப‌டும். எலும்புகள் உறுதியாகும். குளிர்ச்சியைத் தரும். அனைவரும் சாப்பிட ஏற்றது.